சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட பெண்களை அனுமதிக்கக் கோரும் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், அனைத்து பெண்களையும் அனுமதிக்க தேவசம் போர்டு சம்மதித்துள்ளதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘ஆண்களை போல பெண்களுக்கும் வழிபாடு நடத்த உரிமை உள்ளது. பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது’ என கூறினர்.
இது தொடர்பாக பேசிய, கேரள அறநிலையத்துறை அமைச்சர் சுரேந்திரன், ‘சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும், உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு கேரள தேவசம் போர்ட்டும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.