இந்தியாவின் கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது ஷிகெல்லா(Shigella ) என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் மழையினால் ஏற்பட்ட விபத்து சம்பவங்களில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளநிலையில் மழை வெள்ளத்திற்கு மத்தியில் ஷிகெல்லா பக்ரீரியா பாதிப்பும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளை வேகமாகத் தாக்கும் ஷிகெல்லா என்ற இந்த புதிய பக்ரீரியா தொற்று உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது எனவும் கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை ஒன்று உயிரிழந்து உள்ளதாகவும் இதனை அடுத்து கேரளாவில் குழந்தைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.