ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தால் தாம் கட்சியை விட்டு விலகுவதாக அக்கட்சியின் சிரேஸ்ட தலைவரும் வழக்கறிஞருமான எச்.எஸ் புல்கா தெரிவித்துள்ளார். 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவை வீழ்த்துவதில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்படுவதுடன் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய முயற்சி செய்து வருகின்றன.
இந்த ஒன்றிணையும் திட்டத்துக்கு, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன், நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு வைத்தால், அல்லது கூட்டணி அமைத்தால் தாம் கட்சியை வெளியேறுவதாக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் சிரேஸ்ட தலைவர் எச்.எஸ்.புல்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.