குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஊடக சுதந்திரம் உட்பட ஜனநாயகத்தை வலுப்படுத்த கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியாக தான் தெரிவு செய்யப்படும் முன்னர், நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே தன்னிடம் மக்கள் முன்வைத்த பிரதான கோரிக்கையாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
பொலன்நறுவை மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழு் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
ஊழல், மோசடி, வீண் விரயத்திற்கு எதிரானவன் என்ற முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் எந்த முறைகேடுகளும் நடக்க இடமளிக்க போவதில்லை.மக்களின் வளத்தை மக்களின் நலன்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதை கொள்கையாக கருதுகிறேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.