பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துள்ளார். இந்து சமுத்திர பெருங்கடல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வியட்னாம் சென்றுள்ள பிரதமர் எதிர்பாராதவிதமாக அங்கு சுஷ்மா சுவராஜை சந்தித்துள்ளார். இந்த திடீர் சந்திப்பை அடுத்து, இருவரும் இருநாடுகளின் உறவு, மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. ஓகஸ்ட் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள குறித்த மாநாட்டில், பல நாடுகள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் பிரதமர் இந்த பயணத்தின்போது பலநாட்டு அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரணில், சுஷ்மாவை திடீர் எனச் சந்தித்தார்…
154
Spread the love