இந்தியாவிலுள்ள 7 மாநிலங்களில் உள்ள 198 அணைகளை பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு நேற்று ஒப்புதலை வழங்கியுள்ளது. இதன்படி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 198 அணைகளை பாதுகாத்து பராமரிப்பதற்கு ஒரு திட்டத்தை உலக வங்கி உதவியுடன் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
இந்த திட்டத்தை நிறைவேற்ற 3,466 கோடி ரூபா செலவாகும் என மறுமதிப்பீடு செய்யப்பட்டு உள்ள நிலையில இவ்வாறு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2,628 கோடி ரூபாயினை உலக வங்கி வழங்கும் எனவும் 747 கோடியை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் வழங்கும் எனவும் எஞ்சிய 91 கோடி ரூபாயை மத்திய நீர் ஆணையயம் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதில் தமிழக அணைகள் பாதுகாப்புக்காக 543 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது