சிங்கள மக்களின் ஆதரவின்றி தீர்வுகாண முடியாது எனவும் மகிந்த – மைத்திரி புரிந்துணர்வினூடாகவே சிங்கள மக்களின் ஆதரவை பெற்று இதனைத் தீர்க்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தாம் இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் சிறுபான்மை கட்சிகளுடன் கலந்துரையாடிவருவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இனப் பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்;கொள்ள வேண்டுமானால் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவு தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மக்களின் ஆதரவை மகிந்த – மைத்திரி கருத்தொருமைப்பாட்டுடனேயே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இல்லாவிட்டால் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.