அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்துள்ளது. கடந்த 24ம் திகதி இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி பகலிரவு போட்டியாக பிரிஸ்பேன் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிஸ்சில் 323 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்ததிருந்த நிலையில் அவுஸ்திரேலிய அணி 179 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ள நிலையில் இரண்டாவது இன்னிஸ் ஆரம்பமாகியிருந்த இலங்கை அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் 17 ஓட்டங்களை பெற்றது.
இந் நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பித்திருந்த நிலையில் இலங்கை அணி 50.5 ஓவர்களை எதிர்கொண்டு, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது
இதனால் இலங்கை அணி 40 ஓட்டத்தால் அவுஸ்திரேலியாவிடம் இன்னிங்ஸ் தோல்வியை தழுவிக் கொண்டுள்ளது.
இவ் விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 05 ஆம் திகதி கென்பிரா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது என்பர் குறிப்பிடத்தக்கது