பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் வாக்கெடுப்புக்கு வந்திருந்தால் நாம் அதில் கலந்துகொண்டிருக்கமாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இன்று(25) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்துக்களை தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
அவசரகால கால சட்டம் அபாயகரமானது,மிகமிக ஆபத்தானது எனவே கடந்தகாலத்தில் தமிழ் மக்கள் மீது ஏவிவிடப்பட்ட இச் சட்டம் இன்று முஸ்லிம் மக்கள் மீது திருப்பி விடப்பட்டுள்ளது. இலங்கையை பொறுத்தவரை அவசரகால சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றின் வலிகளை நேரில் கண்டவர்கள். இதனை நடைமுறைப்படுத்தியவர்கள் மகிந்த ராஜபக்ஸ,கோத்தபாய ராஜபக்ஸ, ரணில் விக்கிர சிங்க, சந்திரிக்கா, தற்போதைய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன என இவர்கள் அனைவராலும் ஏவிவிடப்பட்ட சட்டமே இது எனத் தெரிவித்த அவர்
நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்திற்கு புலனாய்வு பிரிவினரால் அறிவித்திருந்த போதும் அரசு நடவடிக்கை எடுக்காது என்பது இத் தாக்குதலுக்கும் அரசுக்கும் தொடர்பிருப்பதாகவே கருத முடிகிறது. குறிப்பாக தமிழ் கிறிஸ்த்தவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்த அவர் இதன் பாதிப்புக்கள் தமிழ் மக்களுக்கே அதிகம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.
#sritharan #mahintharajapaksha #tna #emergencylaw #eastersundayL # K ranil wickramasinghe