அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் செய்யாத குற்றத்துக்காக 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று கறுப்பினத்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 14 வயது சிறுவன் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அல்பிரட், ஆண்ட்ரூ மற்றும் ரான்சம் ஆகிய மூவருக்கும் கடந்த 1984 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த வழக்கின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் குறித்த மூவரையும் குற்றமற்றவர்கள் என தெரிவித்து தற்போது விடுதலை செய்துள்ளனர். 1983ஆம் ஆண்டு டிவிட் டக்கெட் என்னும் 14 வயது சிறுவன் பாடசாலை செல்லும் வழியில் வைத்து கொல்லப்பட்டிருந்தமை தொடர்பாகவே இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது #அமெரிக்கா #சிறை #கறுப்பினத்தவர்கள் #விடுதலை