நிலவில் தரை பகுதியை ஆய்வு செய்ய ‘ரோவர்’ இயந்திரத்துடன் சந்திரயான்-2 விண்கலம் ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்
பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-2 விண்கலம் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதம் விண்ணில் செலுத்த முடிவு செய்திருந்த போதும் சில சோதனைகள் இன்னும் முடிவடையாததால், மார்ச் மாதம் 25ம் திகதியிலிருந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அதில் ரோவர் நகரும் ஆய்வு இயந்திரம் பொருத்தப்படும் எனவும் அந்த வாகனம், நிலவில் தரையில் இறங்கி 500 மீற்றர் சுற்றளவுக்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்ரோ வெளிநாடுகளிலும் தரை கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்க முடிவு செய்pதுள்ள அதேவேளை இஸ்ரோ தொலைக்காட்சியை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.