இலங்கை பிரதான செய்திகள்

“அப்பா சிறையில் வருமானத்திற்காக கச்சான் விற்கிறோம்” – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-

child

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யபட்டு உள்ள பிரதான சந்தேக நபர்களில் ஒருவரின் பிள்ளைகள் வறுமை காரணமாக யாழ். நகரில் கச்சான் விற்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களில் ஒருவரின் பிள்ளைகளே குடும்ப வறுமை காரணமாக கச்சான் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்.நகர் பகுதிகளில் கச்சான் விற்கும் சிறுவன் ஒருவன்  தனது அப்பா புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தான்.

அந்த சிறுவன் மேலும் தெரிவிக்கையில் ,

தனது அப்பா சிறையில் உள்ளதனால் குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் உள்ளது. நாம் முதலில் புங்குடுதீவில் வசித்தோம். பின்னர் அப்பா அந்த வழக்கில் கைது செய்யப்பட்டதனால் நாம் தொடர்ந்து அங்கு வசிக்க முடியாததால் யாழ்.நகருக்கு வந்து விட்டோம்.

நாம் தற்போது உள்ள வீட்டின் அருகில் உள்ள பாடசாலையில் தான் கல்வி கற்று வருகின்றோம். பாடசாலை சென்று வீடு வந்ததும் அம்மா கச்சான் வறுத்து சரையாக கட்டி வைச்சு இருப்பா, அதனை எடுத்து வந்து யாழ்.நகர் பகுதிகளில் விற்போம்.  அதில் வரும் வருமானம் மூலமே எமது குடும்பம் நடக்கின்றது.

img_5208

எமது குடும்பத்தில் நாம் மூன்று பிள்ளைகள் நான் தான் முதல் பிள்ளை அடுத்த ஆண்டில் நான்காம் ஆண்டுக்கு செல்கிறேன். எனக்கு ஒரு தங்கையும் ஒரு தம்பியும் உண்டு என தெரிவித்தான் அந்த சிறுவன்.

புங்குடுதீவு மாணவி கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி பாடசாலைக்கு செல்லும் பொழுது கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அது தொடர்பான பொலிஸ் விசாரணைகளை அடுத்து புங்குடுதீவை சேர்ந்த மூன்று நபர்கள் முதலில் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் மூவருமாக 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கபட்டு உள்ளன

 

 

 

 

child

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *