பிரதான செய்திகள் விளையாட்டு

விரட் கோலியை சிறந்த துடுப்பாட்ட வீரராக கருத முடியாது – ஜேம்ஸ் அன்டர்சன்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
virat-kohli-james-anderson
இந்திய அணித் தலைவர் விரட் கோலியை சிறந்த துடுப்பாட்ட வீரராகக் கருதப்பட முடியாது என இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட்  போட்டித் தொடரில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்டுள்ள  கோலி  அதிகூடிய ஓட்டங்களாக 235 ஓட்டங்கள் உள்ளடங்களாக 128 என்ற சராசரி பெறுதியை பதிவு செய்துள்ளார்.

எனினும் இந்திய ஆடுகளங்களில் கோலி சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய போதிலும் இங்கிலாந்து ஆடு களங்களில் அவரினால் திறமையாக செயற்பட முடியவில்லை என அன்டர்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற போட்டித் தொடரில் கோலியை தாம் நான்கு தடவைகள் ஆட்டமிழக்கச் செய்ததாகவும், 13.40 பூச்சியம் என்ற சராசரியையே அவர் பெற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்ப ரீதியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக கோலியை கருத முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts