இலங்கை பிரதான செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல்வாதி?

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
questian
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னணியில் ஒர் அரசியல்வாதி உள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசியல்வாதி இந்த போராட்டத்தை வழிநடத்தியுள்ளதாக அரசாங்கத்தின் பிரதானிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கைக்கும் சீன நிறுவனத்திற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் காரணமாக தரகுப் பணத்தை இழந்த அரசியல்வாதி இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டி வருவதாகவும் திட்டமிட்ட வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளின் மூலம் இந்த போராட்டத்தை வழிநடத்திய அரசியல்வாதி பற்றிய தகவல்கள் அம்பலமாகினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *