இலங்கை பிரதான செய்திகள்

யுத்தத்திற்கு வழியமைக்கும் மத அமைப்புக்கள் எங்கள் மத்தியில் இருப்பது துரதிஸ்டமானதே – அர்ஜூன ரணதுங்க

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யுத்தத்திற்கான வழியை அமைக்கும் மத அமைப்புக்கள் எங்கள் மத்தியில் இருப்பது துரதிஸ்டவசமானதே என துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 
மீளவும் யுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் செயற்படும் மத அமைப்புக்கள் எங்கள் மத்தியில் இருப்பது கவலையளிக்கின்றது எனவும் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் போதிய தெளிவு இல்லாதவர்கள் செய்யும் பிரச்சாரங்கள் மீளவும் யுத்தத்திற்கு வழியமைக்கும் வகையில்  அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
இனவாத மதவாதத்தை தூண்டிய தரப்பினர் மீளவும் ஒருங்கிணையத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் அரசியல் சாசனம் பற்றி பல்வேறு யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் எதுவும் இறுதியாக்கப்படவில்லை எனவும்  அந்த நிலையில் இனவாத மதவாத சக்திகள் போலிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இனவாத சக்திகள் இடையே பௌத்தர்களைப் போன்றே ஏனைய மதத்தவர்களும் இருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *