இலங்கை பிரதான செய்திகள்

பிரபாகரனையும் தளபதிகளையும் காப்பாற்ற கடைசிநேரங்களில் அமெரிக்கா போராடியது :


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகளை யுத்த களத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற கடைசிநேரங்களில் அமெரிக்கா போராட்டம் நடத்தியதாக  முன்னாள் தேசிய பாதுகாப்பு செயலர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் உள்ளிட்ட தளபதிகளை காப்பாற்ற அமெரிக்காவும், நோர்வேயும் முயற்சித்த போது  அதனை  இந்தியா எதிர்த்தது எனவும்  இந்தியாவின் எதிர்ப்பை தமிழக தலைவர்களும் ஆதரித்தனர் எனவும்   சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரியும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றியவருமான டயா கமேஜ்  என்பவர் “Tamil Tigers’ Debt to America: US Foreign-Policy Adventurism & Sri Lanka’s Dilemma”   என்னும்  தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்தில்   விரிவாக எழுத்ப்பட்டுள்ளது.

குறிப்பாக 2009-ம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்த நாட்களின் போது பிரபாகரன் மற்றும் தளபதிகளைக் காப்பாற்ற அமெரிக்கா  எடுத்த முயற்சி குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வலய    ங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளின் மீது இலங்கை இராணுவம் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தக் கூடாது என அமெரிக்கா எச்சரித்ததாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு சந்தர்ப்பத்தில்  அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த  ஹிலாரி கிளின்ரன் சர்வதேச நாணயநிதியம் ஊடாக  இலங்கை மீது தடைகளையும் ஏற்படுத்தி பணிய வைக்கவும் முனைந்தார் எனவும் அந்த நூலில் தெரிவிக்க்பபட்டுள்ளது.

அமெரிக்கா விடுதலைப் புலிகள் அமைப்பை  பயங்கரவாத அமைப்பு என  தடை செய்திருந்தாலும் அந்த அமைப்பினால் தனக்கு ஒரு பாதிப்பும் இல்லை என கருதிய அதேவேளை   இலங்கையை இரண்டாக பிரிக்கவும் விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் எனவும் அமெரிக்கா விரும்பியது எனவும் அந்தப் புத்தகத்தில்  எழுதப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *