இலங்கை பிரதான செய்திகள்

பெரியகுளம் இரட்டைப்பனை பகுதியில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்திநிலையம் முற்றுகை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பெரியகுளம்  இரட்டைப்பனை   பகுதியில் இயங்கிவந்த  கசிப்புஉற்பத்திநிலையம் ஒன்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதிப் காவல்துறைமா அதிபர் மகேஷ் வெலிகன்னவின் விசேட குழுவினரால்  முற்றுகை இடப்பட்டுள்ளது

இன்று( வியாழன்) பிற்பகல்   கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து    காவல்துறை குழுவினர் குறித்த பகுதிக்கு சென்று முற்றுகை இட்டதனை அடுத்து 55,550 ml கசிப்பு ,ஆறு   பரல்களில் இருந்த 6,74,750 ml கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி செய்வதற்கான உபகரணங்கள் மூன்று  என்பன  புளியம்பொக்கணை  ,பெரியகுளம்  இரட்டைப்பனை  பகுதியில்   மீட்கப்பட்டுள்ளதுடன் இரு சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்

மீட்கப்பட்ட  பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளை    கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *