இலங்கை பிரதான செய்திகள்

மலேசிய வர்த்தக குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில்

இலங்கை மற்றும் மலேசிய நாடுகளுக்கிடையே காணப்படும் வியாபார மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை மேம்படுத்தும் நோக்குடன் இரு நாட்டின் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்துகொண்ட வர்த்தக குழுக்கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் தலைமையில் இன்று (15) பிற்பகல் கோலாலம்பூரில் இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளினதும் முதலீட்டுச் சபைகள், ஏற்றுமதி அபிவிருத்தி சபைகள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக் கூட்டத்தில் இரு நாடுகளையும் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் பங்குபற்றினர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் புதிய முயற்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் அதற்கான பல ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *