இலங்கை பிரதான செய்திகள்

1340 மில்லியன் டொலர் கடன் வழங்க உலக வங்கி இணக்கம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கைக்கு 1340 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்குவதற்கு உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தகவல் வெளியிட்டுள்ளார். கடன் தொகை வழங்குவது குறித்து உலக வங்கி, இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது எனவும் இலங்கை ஆரம்பித்துள்ள அபிவிருத்தித் தந்திரோபாயங்களை கருத்திற் கொண்டு இந்தக் கடன் தொகையை உலக வங்கி வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சலுகை அடிப்படையில் வழங்கப்பட உள்ள இந்தக் கடன் எதிர்வரும் மூன்றாண்டு காலப்பகுதியில் வழங்கப்பட உள்ளதாகவும் இதனை 15 ஆண்டுகள் என்ற சலுகைக் கால அடிப்படையில் செலுத்தி முடிக்க முடியும் எனவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *