இலங்கை பிரதான செய்திகள்

அச்சமின்றி இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜனாதிபதி அழைப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அச்சமின்றி இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது மலேசியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்நாட்டில் இடம்பெற்ற வர்த்தக சம்மேளனமொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் ஆயத்தமாக உள்ளது எனவும் எதிர்வரும் மூன்று ஆண்டுகளும் இலங்கையின் அபிவிருத்தி ஆண்டுகளாக  அடையாளப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளினதும் முதலீடுகள் மற்றும் வர்த்தக வாய்ப்புக்களை விஸ்தரித்து கொள்வது தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதுடன், உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *