உலகம் பிரதான செய்திகள்

பாகிஸ்தானில் 13 தீவிரவாதிகளுக்கு மரணதண்டனை

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி பொதுமக்கள், காவல்துறை  அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் என பல தரப்பினரையும் கொலைசெய்த வழக்குகள் தொடர்பில் 13 தீவிரவாதிகளுக்கு  இராணுவ நீதிமன்றங்கள் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளன.

இந்த 13 பேரும், மொத்தமாக 325 பேரை கொன்றுள்ளதுடன்  366 பேரை  காயங்களுக்குள்ளாகியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.  இதனை நேற்றையதினம் பாகிஸ்தான் இராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வா நேற்று உறுதி செய்து உத்தரவிட்டுள்ளார்.

பெஷாவர் இராணுவ  பாடசாலையில்  தாக்குதல்  இடம்பெற்ற  2-வது நினைவுநாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில்  இந்த தீவிரவாதிகள்; மீதான மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *