இலங்கை பிரதான செய்திகள்

காணிகளை இராணுவத்தினர் கைவசப்படுத்தியுள்ளதனால் மக்கள் பாதிப்பு :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருப்பதனால் பொதுமக்கள் பொருளாதார ரீதியாக  பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக  முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர் ரட்ணராசா தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் பல்வேறு இடங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறி உள்ள போதும்  இன்னமும்;  பொதுமக்கள் பலரின் காணிகளில் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாகவும்  தொடர்ந்தும் ராணுவத்தினர் மக்களின் காணிகளை கையப்படுத்தி வைத்திருப்பது பொதுமக்களுக்கு எதிரான செயற்பாடாகவே கருதப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்  வடக்கில் இராணுவத்தினர் தம்வசம் கையகப்படுத்தி வைத்துள்ள பொதுமக்களின் பூர்வீக காணிகள் அனைத்தையும் எதிர்வரும் ஆண்டில்  விடுவிக்க நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *