இந்தியா பிரதான செய்திகள்

மதிமுகவினர், மு.க.ஸ்டாலினின் உருவபொம்மையை எரித்து போராட்டம்


தமிழ்நாட்டின் கோவில்பட்டியில் மதிமுகவினர்,  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து  அவரது உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து  20 மதிமுக உறுப்பினர்களை  காவல்துறையினர் கைது செய்தனர்.

சுகயீனம் காரணமாக   காவேரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை நேற்றையதினம் நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற  மதிமுக பொது செயலாளர் வைகோவின் வாகனம் மீது திமுக தொண்டர்கள் தாக்குதல் மேற்கொண்டமைக்கு  கண்டனம்  தெரிவித்தே   அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஸ்டாலினின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து உருவபொம்மை எரித்த 20 பேரை  காவல்துறையினர்  கைது செய்துள்ளனர

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *