உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் 95 கனரக வாகனங்கள் மோதிக் கொண்டதில் இருவர் பலி -பலர் காயம் – 70 வாகனங்கள் சேதம்

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தின் தலைநகர் பால்டிமோரில்  உள்ள வீதியில் 95 கனரக வாகனங்கள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக  சென்று கொண்டிருந்த நிலையில்  திடீரென எரிபொருள் ஏற்றிக் கொண்டு சென்ற கனரக வாகனம் ஒன்று திடீரென சாரதியின்  கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் வாகனம் தீப்படித்தது.

இதனைத் தொடர்ந்து  அந்த வாகனத்திற்கு பின்னால் வந்து கொண்டிருந்த ஏனைய வாகனங்களின் சாரதிகள் பிரேக் பிடித்தமையினால்  ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதனால்  70 வாகனங்கள்  சேதமடைந்துள்ளதுடன்   இருவர்  உயிரிழந்துள்ளனர்.
மேலும்  25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *