உலகம் பிரதான செய்திகள்

இணைப்பு 2 – சைபீரியாவில் வீழ்ந்த ரஷ்ய விமானம் – 23 பேர் காயம்

தமது விமானம்  வடகிழக்கு சைபீரியாவில் வீழ்ந்ததாக ரஷ்ய பாதுகாப்பமைச்சு  அறிவித்துள்ளது.  எனினும், இந்த இந்த விபத்தில் ஒருவரும்  உயிரிழக்கவில்லை எனவும்  23 பேர் வான்வழியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்  தெரிவித்த ரஷ்ய பாதுகாப்பமைச்சு, 16 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது

40 பேருடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் சைபீரியாவில் விழுந்தது:-

40 பேருடன் சென்ற ரஷ்யாவின் ராணுவ விமானம் ஒன்று சைபீரியா பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த  விமானத்தில் பயணித்த 40 பேரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

 

நாசவேலை காரணமாக விமானம் வீழ்ந்ததா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் வீழ்ந்ததா எனத் தெரியவில்லை எனக் கூறும் ரஸ்ய தகவல்கள் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கின்றன.

 

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *