இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதி பிரமேதாசாவிடம் சிறந்த திட்டங்கள் காணப்பட்டன – மஹிந்த ராஜபக்ஸ:-


முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிடம் சிறந்த திட்டங்கள் காணப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அண்மையில் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர்,
தற்போதைய அரசாங்கத்தை விடவும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிடம் சிறந்த திட்டங்கள் காணப்பட்டனப்பட்டதாகவும்,
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் முக்கியமான அரச சொத்துக்களை விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையை சீனாவிற்கும், பலாலி, காங்கேசன்துறை போன்றவற்றை இந்தியாவிற்கும், கொழும்பை அனைவருக்கும் விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், ஹம்பாந்தோட்டை மக்கள் தமக்கு ஆதரவளித்த காரணத்தினால் இந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்டை மக்களை பழிவாங்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *