இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

பாராட்பட வேண்டிய சிங்கள அரச உத்தியோகஸ்தர்கள் – “தமிழ் மொழிக்கு முதலிடம்”

கம்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 100 அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு 12 நாட்கள் இரண்டாம் மொழியான தமிழ்மொழி பயிற்சிநெறி ஒன்றினை தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நடாத்தியது.

அரச ஊழியர்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தபட்ட இந்த பாடநெறியின் (முடிவு) இறுதி நாள் ஒரு தழிழ் காலாச்சார நிகழ்வாக கம்பளை பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

அதன் போது அரச சிங்கள உத்தியோகஸ்தர்கள் தமிழ் கலாச்சார நிகழ்வுகளை மேடையேற்றினர். இந்த நிகழ்வுகள் ஏனையோருக்கு ஒரு முன்னுதாரணமாக காணப்பட்டதுடன் மிகவும் இரசிக்க கூடிய தன்மை உடையதாக காணப்பட்டது.

இந் நிகழ்விற்கு தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பனிப்பாளர் ஆர்.பிரசாந் ஆரியரத்தன உட்பட பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் மொழி பயிற்றுவிப்பாளரகள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

இவ்வாறான செயற்திட்டங்கள் பாராட்டதக்க ஒன்றாகும்  எனவும் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது தற்போதய நிலையில் ஒரு காலத்தின் கட்டாயமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த செயற்திட்டத்தினை தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சிங்கள மொழியினை தழிழ் அரச உத்தியோகஸ்தர்களுக்கும். தமிழ் மொழியினை சிங்கள அரச உத்தியோகஸ்தர்களுக்கும் பயிற்றுவித்து வருகின்றமை குறிப்பிடதக்க ஒன்றாகும்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *