இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதிக்கு விசேட சர்வதேச விருது

சிறுநீரக நோய்த் தடுப்புக்காக ஆற்றிய பணியைப் பாராட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறுநீரக நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் சர்வதேச அமைப்பு , விசேட விருது வழங்கியுள்ளது.

நேற்று (19) பிற்பகல் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் இந்த விருது சிறுநீரக நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் சர்வதேச அமைப்பின் தலைவி பேராசிரியர் அடீரா லெவின் அம்மையாரால் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள ஆதரவற்ற சிறுநீரக நோயாளர்களின் நலன்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்திட்டத்துக்கு இந்த விருது பெரும் பலமாகும் என்பதனால் அனைத்து இலங்கை மக்கள் சார்பிலும் சிறுநீரக நோய் தொடர்பான மருத்துவ நிபுணர்களின் சர்வதேச அமைப்புக்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதாக நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *