பிரதான செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்துக்திரான டெஸ்ட் போட்டித் தொடரை இந்தியா வென்றுள்ளது


இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் இடம்பொற்ற  ஐந்தாவதும் இறுதியுமான  கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 75 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் வென்று இந்திய அணி டெஸ்ட் தொடரை 4 -0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இவ்விரு அணிகளுக்குமிடையே சென்னையில் ஆரம்பமான ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில்  நாணயச்சுழற்சியில் வென்று  முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்த 477  ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்திய அணி  முதல் இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 759 ஓட்டங்களைப் பெற்றுள்ள நிலையில், தனது முதல் இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.  இரண்டாவது இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி 207  ஓட்டங்களை  மட்டுமே  பெற்று  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 75 ஓட்ட் வித்தியாசத்தில் சென்னை டெஸ்ட் போட்டியை வென்ற இந்திய அணி,  டெஸ்ட் தொடரை 4 -0 என்ற கணக்கில் கைப்பற்றியது.  303 ஓட்டங்களைப் பெற்ற  கருண் நாயர் ஆட்ட நாயகனாகவும், இந்திய அணித்தலைவர் விராட் கோலி தொடர் நாயகனாகவும் தெரிவு  செய்யப்பட்டனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *