இலங்கை பிரதான செய்திகள்

சசி வெல்கமவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சசி வெல்கமவின் விளக்க மறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபையின் சுமார் 125 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்ததாக சசி வெல்கம மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 20ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த  சசி வெல்கமவை எதிர்வரும் 26ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார். சசி வெல்கம, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

சசி வெல்கம கைது

Dec 20, 2016 @ 19:04


இலங்கை போக்குவரத்துச் சபையின் முன்னாள் தலைவர் சசி வெல்கம கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் சசி வெல்கம கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வெல்கமவை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சசி வெல்கம, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *