இலங்கை பிரதான செய்திகள்

கருணாநிதியின் உடல் நலம் தேற வேண்டுமென ஜனாதிபதி பிரார்த்தனை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உடல் நலம் தேற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரார்த்தனை செய்துள்ளார். ஜனாதிபதியின் சார்பில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், கருணாநிதியை சென்று பார்வையிட்டுள்ளார்.

சென்னை காவேரி வைத்தியசாலையில் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகின்றார். துரித கதியில் கருணாநிதி குணமடைய வேண்டுமென பிரார்த்திப்பதாக ஜனாதிபதி, செந்தில் தொண்டமான் ஊடாக செய்தி அனுப்பி வைத்துள்ளார். இலங்கை மக்களும் கருணாநிதியின் உடல் நலத்திற்காக பிரார்த்தனை செய்வதாக தாம் கருணாநிதி குடும்பத்தாரிடம் கூறியதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *