உலகம் பிரதான செய்திகள்

மெக்சிகோவில் பட்டாசு சந்தையில் இடம்பெற்ற தொடர் வெடிப்புகளில் 29 பேர் பலி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மெக்சிகோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள பட்டாசு சந்தை ஒன்றில் இடம்பெற்ற தொடர் வெடிப்புகளில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டதாகவும்,  72 பேர்  காயமடைந்துள்ளதாகவும்   தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்துக்காரணமாக அதிகளவான  தீப்பிடித்த  பட்டாசுகள் காற்றில் பறந்து செல்வதை சம்பவம் நடந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட காணொளி காண்பித்துள்ளது.


விபத்து ஏற்பட்டுள்ள இடத்துக்கு மருத்துவ குழுவினரும்,  காவல்துறையினரும் சென்றுள்ளதுடன்  விபத்து ஏற்பட்ட பகுதிக்கு பயணம் செய்ய வேண்டாம் எனவும்  அப்பகுதிக்கு செல்லும் வீதிகளை தவிர்க்குமாறும்  பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்ததற்கான காரணம் என்னவென்று இன்னமும் தெரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *