இந்தியா பிரதான செய்திகள்

12 இந்திய மீனவர்கள் கைது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் ஒத்துழைப்புடன் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தலைமன்னாரின் தெற்கு கடற்பகுதியில் வைத்து இந்த மீனவர்களை கைது செய்துள்ளனர். இந்த மீனவர்கள் பயணித்த இரண்டு ட்ரோலர் படகுகளும் மீட்கப்பட்டுள்ளன. இந்த மீனவர்கள் இலங்கை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *