இந்தியா பிரதான செய்திகள்

தொழிலதிபர் சேகர் ரெட்டி கைது

தொழிலதிபர் சேகர் ரெட்டியை இன்றைய தினம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கடந்த 8ம்திகதி  சேகர் ரெட்டியின்  வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில்  136 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் கைப்பற்றப்பட்டது. அதில் 34 கோடி ரூபாய் புதிய 2,000 ரூபாய் தாள்களாகக் காணப்பட்டன.

இந்த நிலையில் இன்று  சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினரான சீனிவாசலு ரெட்டி  என்பவர்களை இன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை குற்றச்சதி, நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி மற்றும் சீனிவாசலுவை ஜனவரி 3ம்  திகதி வரை காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *