இந்தியா பிரதான செய்திகள்

தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் பதவிநீக்கம் கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அப்பதவியிலிருந்து இன்று நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது நில நிர்வாகத்துறை ஆணையாளராக பதவியிலுள்ளார். இந்த பதவியையும் அவர் கூடுதலாக கவனிப்பார். ஆளுநர் உத்தரவுப்படி பொதுத்துறை முதன்மை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கிரிஜா வைத்தியநாதன் 1981ம் ஆண்டு பேட்ஜ் தமிழ்நாடு அணி ஐஏஎஸ் அதிகாரியாவாா் .  ஐஏஎஸ் அதிகாரியாக 30 வருட காலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் வீட்டிலும் அவரது மகன் வீட்டிலும்  நேற்றையதினம்  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில்  அவரை அப்பதவியிலிருந்து நீக்க கோரிக்கைள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *