பிரதான செய்திகள் விளையாட்டு

அன்ட்ரே ரஸலின் கிரிக்கட் மட்டைக்கு தடை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அன்ட்ரே ரஸலின் கிரிக்கட் மட்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஸல் தற்போது அவுஸ்திரேலியாவின் பிக்பேஸ் டுவன்ரி20 போட்டித் தொடரில் பங்கேற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்ட்ரே ரஸல் இளம் சிவப்பு மற்றும் கறுப்பு நிற மட்டையொன்றை பயன்படுத்துவதனால்; பந்தில் கறுப்பு நிறம் படிவதாகவும் இதனால் கிரிக்கட் மட்டையை பயன்படுத்த வழங்கப்பட்ட அனுமதியை வாபஸ் பெற்றுக்கொள்வதாக பிக்பேஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. பந்தின் நிறத்தைப் பாதிக்காத வகையில் எந்தவொரு நிறத்திலும் மட்டைகளைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *