இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

நாவலபிட்டியில் தீ வீபத்து – குடியிருப்பு முற்றாக சேதம் – ஒருவர் வைத்தியசாலையில் :

நாவலபிட்டிய பொலிஸ் பிரிவு பஸ்பாகே பிரதேச சபை பிரிவிற்கு உட்பட வெவேகம கிராம சேவக பிரிவில் கலபொட தோட்டம் மேல் பிரிவில். நேற்று (21)  இரவு ஏற்பட்ட தீ வீபத்தில்  04 வீடுகள் உள்ள குடியிருப்பு தொகுதியில் வீடு ஒன்று முற்றாக தீக்கிரையாகி உள்ளது. தீயை அணைக்க முயற்சித்த பெருமாள் ஜீவகுமார் (வயது 40) என்பவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இந்த தீ வீபத்து தொடர்பாக மேலும் தெரியவருதாவது.

ஆர்.ரெங்ககாமி என்பரின் வீட்டில் நேற்று (21) இரவு 09.00 மணியளவில்  ஏற்பட்ட  தீ இரவு 12.00 மணிக்கே பொது மக்காளால் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  தீ ஏற்படும் வேளையில் ரெங்கசாமி உட்பட இவரின் மகன்¸ மருமகள் பேரபிள்ளைகள் ஆகியோர்  உறவினர் வீடு ஒன்றுக்கு சென்றுள்ளனர். மனைவி வெளிநாட்டில் தொழில் செய்து வருகின்றார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு பொலிஸார்¸ கிராமசேவகர்¸ தோட்ட முகாமையாளர் உடனயாக விரைந்து மேலதிக நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.  வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்சார கசிவு இந்த தீ வீபத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கபடுகின்றது. இந்த தீயை அணைப்பதற்கு முயற்சித்த வேளை யாயமடைந்த பெருமாள் ஜீவகுமார்; பொலிஸாரின் உதவியுடன் நாவலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்து உள்ளனர்.

இந்த தீவிபத்தின் போது பல இலட்ச ரூபா பெறுமதியாள பொருட்களின் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *