பிரதான செய்திகள் விளையாட்டு

ஐசிசியின் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக அஸ்வின் தெரிவு

சர்வதேச கிரிக்கெட் சபையான ஐசிசியின்  2016ஆம் ஆண்டின்  சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபையின்   டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

அஸ்வின் இந்த விருதைப் பெறும் மூன்றாவது இந்திய வீரர் என்பதுடன்  ஒரே வருடத்தில் இரு விருதுகளை பெறும் இரண்டாவது இந்திய வீரர் என்ற சிறப்பையும் அஸ்வின் பெற்றுள்ளார்.

இந்த விருதுத் தேர்வுக்கான காலத்தில் அஸ்வின் எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுகளையும், 336 ஓட்டங்களையும் சேர்த்துள்ளார். மேலும் 19 இருபதுக்கு20 போட்டிகளில், 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *