இலங்கை பிரதான செய்திகள்

மாவீரர்தினத்தை கொண்டாடுவதில் பிரச்சினையில்லை – வஜிர அபேயவா்த்தன

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாவீரர் தினத்தை கொண்டாட  முடியும்  எனவும் அதில் பிரச்சினையில்லை எனவும் பொது நிர்வாக  உள்நாட்டலுவல்கள் அமைச்சா் வஜிர அபேயவா்த்தன தெரிவித்துள்ளார்

இன்றையதினம் பூநகரி  வாடியடிச் சந்தியில் அமைந்துள்ள   என்ரிப் திட்டத்தின் 14 மில்லியன் ரூபா மற்றும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 60 மில்லியன் ரூபாவிலும் அமைக்கப்பட்ட புதிய பிரதேச செயலக கட்டடத்திறப்பு  விழாவிற்கு முதன்மை விருந்தினராக  வருகைதந்து  வைபவரீதியாக  குறித்த கட்டடத்  தொகுதியை திறந்து வைத்த அவர்  அங்கு  உரைநிகழ்த்தும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் தனது உரையில்  மேலும் தெரிவிக்கையில்  சிலர்     மாவீரர்தினம்   கொண்டாடுவது தொடர்பில் கவலைப்படுகின்றார்கள்  ;  எழுபத்தி ஓராம் ஆண்டு ,  என்பத்தி  ஏழு மற்றும் என்பத்தி  எட்டாம் ஆண்டுகளில்     தெற்கில் இடம்பெற்ற  கலவரங்களின்  போது ஏற்பட்ட  இழப்புக்களால்     இறந்தவர்களையும்           நினைவு கூறுகின்றாா்கள்.   எமது மதத்தின் படி இறந்ததன் பின்னர்  அனைத்து உறவுகளுக்கும்  மரியாதை  செலுத்த  வேண்டும்  இறந்ததற்குப்  பின்னர்  நல்லவரா  கெட்டவரா   என்பதெல்லாம்  தேவையில்லை  எல்லா  மனிதர்களும்  இறப்புக்கு பின்  மரியாதை செலுத்த  வேண்டியவா்கள்  என்றே  எமது மதம் எமக்கு  சொல்கிறது. எனவே மாவீரர் நாள் கொண்டாடுவது பிரச்சினைக்குரிய ஒன்றல்ல என அமைச்சா் தெரிவித்தார்.

இந்தப்  மாவீரர் நாள் கொண்டாடும் பிரச்சினையை  காவல்துறையினா்  மீதோ  முப்படைகளின்  மீதோ இராணுவ  அமைப்புக்களின்  மீதோ  அல்லது அரசியல் வாதிகளின் மீதோ  திணிப்பது  நல்லதல்ல  எனவும் உண்மையில் நாங்கள் மனிதாபிமானத்துடன்  செயற்பட வேண்டும்  எனவும் அவர்  கூறினாா்

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் குறைபாடுகளை தீா்க்க நடவடிக்கை –  வஜிர

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் குறைபாடுகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் என பொது நிா்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சா் வஜிர அபேயவா்த்தன தெரிவித்துள்ளாா்.

இன்று வியாழக்கிழமை  மதியம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சா் மாவட்டச் செயலாளா் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தா்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக இன்றைய தினம் கிளிநொச்சி பூநகாி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்த  பொது நிா்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சா் பின்னா் மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்து அங்கு உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுப்பட்டாா்.

இந்தக் கலந்துரையாடலின் போது கிளிநொச்சி மாவட்டச் செலயக உத்தியோகத்தா்களால் பல்வேறு விடயங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போதே அமைச்சா் மாவட்டச் செயலகத்தின்தேவைகள் குறைபாடுகள் தொடா்பில் கவனம் செலுத்துவதாவும் உரிய நடவடிக்கை எடுப்பதாவும் தெரிவித்துள்ளாா் .

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *