இலங்கை பிரதான செய்திகள்

நல்லிணக்கத்தை ஏற்படுத்த கிறிஸ்தவ சமூகம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் – கர்தினால்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இனங்களுக்கு இடையில் சமாதானம் மற்றும் நல்லணக்கத்தை ஏற்படுத்தும் சவால்களை வெற்றிகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கிறிஸ்தவ சமூகம் ஒத்துழைப்பு வழங்கும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற தேசிய நத்தார் விழாவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கையில் பல் மத மற்றும் பல் இன மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அனைத்து தரப்பினரிடையேயும் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டி சவால் ஜனாதிபதிக்கு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சவாலை வெற்றிக் கொள்ளும் ஜனாதிபதியின் முனைப்புக்களுக்கு கிறிஸ்தவ சமூகத்தின் முழுமையான ஒத்துழைப்பு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *