இலங்கை பிரதான செய்திகள்

களுதாவளைக் கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி காவல்துறைப் பிரிவுக்குட்ட களுதாவளைக் கடற்கரையிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை விமானத்தின் பாகமொன்று மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்கரை பகுதியில் பாரிய இயந்திரம் போன்றதொரு பொருள்  இருப்பதனை  அவதானித்த மீனவர்கள்  வழங்கிய தகவல்களுக்கமைய  சம்பவ இடத்திற்கு  சென்ற கதவல்துறையினர்  அதனை பார்வையிட்ட பின்னர் அது விமானத்தின் பாகம் என உறுதிப்படுத்தியுள்ளனர்.

மீட்கப்பட்டுள்ள பாகமானது எந்த நாட்டின் விமானத்தின் பாகம் என்பது உறுதிபடுத்த முடியாதுள்ள நிலையில், இது தொடர்பில் ஆய்வு செய்வதற்காக குறித்த பாகத்தினை விமானப் படையினர் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *