உலகம் பல்சுவை பிரதான செய்திகள்

முதன் முறையாக கை இல்லாதவருக்கு கை பொருத்தி போலந்து மருத்துவர்கள் சாதனை


உலகில் முதன் முறையாக பிறவியிலேயே கை இல்லாத ஒருவருக்கு இறந்த ஒருவரின் கை பொருத்தி போலந்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.  போலந்தைச் சேர்ந்த 32 வயதான இளைஞர் ஒருவருக்கு பிறவியிலேயே கை இல்லாதனால் மிகவும்  சிரமங்களை எதிர்நோக்கி வந்தாா். இதனையடுத்து  அவர்   விரோல்கலா பல்கலைக்கழக மருத்துவமனை  சத்திர சிகிச்சை நிபுணரான  வைத்தியர் அடம் டொமேன்ஸ் விகாவிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

அதன்படி கடந்த 15ம்திகதி  கை இல்லாத நபருக்கு வைத்தியர் அடம் தலைமையிலான குழுவினா்  இறந்த ஒருவரின் கையை தானமாக பெற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.

தற்போது பொருத்தப்பட்ட கைகளில் நரம்பு மற்றும் ரத்த ஓட்டம் சீராகி நல்ல முறையில் செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுமார் 12 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையின் போது  எலும்புகள் டைட்டானியத் தகடுகள் மற்றும் ஸ்குரூக்களால் இணைக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *