இலங்கை பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும் என கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் திலக் வராகொட தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2017ம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர் கட்சிகளை உருவாக்குவதன் மூலம் தேர்தல் வெற்றிகளை ஈட்ட முடியாது என குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தோற்கடிக்கச் செய்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள கடந்த காலங்களிலும் சந்தர்ப்பம் கிட்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *