இந்தியா பிரதான செய்திகள்

ராமமோகன ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

வருமான வரித்துறை அழைப்பாணை அனுப்பியும் அங்கு செல்லாத  தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை – போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருமான வரித்துறை அதிகாரிகள் ராம மோகன ராவ் வீட்டில் இருந்து  பணம் , நகைகள் மற்றும்  பல கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ராமமோகன ராவ்   விலக்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக, ராமமோகன ராவ், அவரது மகன் விவேக், நண்பர்கள் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில்  ராமமோகன ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *