இலங்கை பிரதான செய்திகள்

ரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் – TNA

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு குறித்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

ராவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐந்து பேரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் எனக் கூறி விடுதலை செய்திருந்தது. எனினும் இந்த தீர்ப்பு குறித்து திருப்தி அடையப் போவதில்லை என தெரிவித்துள்ள சுமந்திரன் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அரசாங்கம் சந்தேக நபர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *