இலங்கை பிரதான செய்திகள்

முன்னாள் போராளி ஒருவர் திடீர் மரணம் – குளோபல் தமிழ் செய்தியாளர்


வவுனியா நெடுங்கேணியின் குளவிசுட்டான் பகுதியை சேர்ந்த முன்னாள் போராளி ஸ்டீபன்  திடீர்  மரணம் அடைந்துள்ளார். 36 வயதுடைய ஸ்ரீபன் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

நேற்று மாலை, புளியங்குளம் பேருந்து தரப்பிடத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டு நின்றபோது திடீர் மயக்கமடைந்த ஸ்டீபன்  இதனையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் மரணடைந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளியாக செயற்பட்ட ஸ்டீபன்  2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினர் சரணடைந்தார். தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.

தற்போது இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் உள்ளது. இறுதிக்கிரியைகள் நெடுங்கேணி குளவிசுட்டானில் நடைபெறுவதுடன் இவரது உடல் நீர்வேலி இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *