பிரதான செய்திகள் விளையாட்டு

தற்போதைக்கு ஓய்வுபெறப் போவதில்லை – ஷஹிட் அப்ரிடி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்போதைக்கு ஓய்வுபெறப் போவதில்லை என பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான ஷஹிட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.  36 வயதான அப்ரிடி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தான் ஓய்வு பெற விரும்புவதாகவும், விடை கொடுக்கும் வகையில் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைக் கேட்டுள்ளதாகவும் வெளிவந்துள்ள  செய்திகளில் உண்மை இல்லை எனவும்  எந்த கட்டத்திலும் யாரிடமும் எதையும் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தான் இல்லை எனவும்  அப்ரிடி தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தனக்கு இருப்பதனால்  இப்போதைக்கு  கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  மேலும் தனக்கு வாய்ப்பளிப்பது தேர்வு குழுவின் முடிவை பொறுத்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *