இந்தியா பிரதான செய்திகள்

போயஸ்கார்டனும், ஜெயலலிதாவின் வேதா இல்லமும் பொலிஸ் முற்றுகையில் இருந்து விடுதலை:-


ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்கார்டன் வேதா நிலையத்துக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொலீசார் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலகட்டங்களில் பாதுகாவலர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

ஜெயலலிதா உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த காரணத்தால் அவர் பாதுகாப்புக்காக சுமார் 240 பொலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

போயஸ்கார்டன் வீட்டில் இருந்து சுமார் 300 அடி தொலைவில் ஒரு உதவி ஆணையாளர் தலைமையில் பொலிஸ் பரிசோதகர். உதவிப் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 10 பொலீசார் தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர். பிரமுகர்களை மட்டுமே அவர்கள் அந்த பகுதியில் செல்ல அனுமதிப்பதுண்டு.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் அடைந்த பின்பும் 240 பொலீசாரும் போயஸ்கார்டன் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இது குறித்து பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் விடுத்த அறிக்கையில், “போயஸ்கார்டன் வீட்டுக்கு இன்னமும் ஏன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்?” எனக் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பை குறைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி போயஸ் கார்டன் வீட்டில் இன்று முதல் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. நான்கு பொலீசார் மட்டுமே அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களை இப்போது தடுத்து நிறுத்தவில்லை. கெடுபிடிகளும் செய்வதில்லை.

போயஸ்கார்டன் வீட்டின் முன்பாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த 15 பேர் சபாரி உடை அணிந்த பாதுகாவலர்கள் மட்டுமே நிற்கிறார்கள். அவர்கள் 5 இடங்களில் தலா 3 பேர் வீதம் நிற்கிறார்கள். உயர் போலீஸ் அதிகாரிகளையோ சட்டம்- ஒழுங்கு பொலீசாரையோ காண முடியவில்லை என தெமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *