உலகம் பிரதான செய்திகள்

உகாண்டாவில் படகு கவிழ்ந்ததில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

உகாண்டாவின் மேற்கு பகுதியில் உள்ள அல்பெர்ட் நதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மூழ்கியவர்களில் பெரும்பாலானவர்கள் கால்பந்து வீரர்கள் மற்றும் அவர்களுடைய ரசிகர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் தினமான நேற்றையதினம் நட்பு முறையிலான கால்பந்து போட்டி ஒன்றில் பங்கேற்பதற்காக  சென்று கொண்டிருந்த வேளை இநடத அனர்த்தம் ஏற்பட்டள்ளது.

படகில் அளவுக்கு அதிகமானோர் இருந்ததாலேயே படகு கவிழ்ந்ததாகவும்    நதியில் அமைதியாக இருந்த நிலையிலேயே படகு கவிழ்நததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் படையினம் 15 பேரை  காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *