இந்தியா பிரதான செய்திகள்

நாடு திரும்புவதா இல்லையா என்பதனை இலங்கை அகதிகளே தீர்மானிக்க வேண்டும் – பொன்.ராதகிருஸ்ணன்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாடு திரும்புவதா இல்லையா என்பதனை இலங்கை அகதிகளே தீர்மானிக்க வேண்டுமென இந்திய மத்திய அமைச்சர் பொன் ராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகள் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

சென்னைக்கு அருகாமையில்  அமைந்துள்ள அகதி முகாம் ஒன்றுக்கு  சென்று  திரும்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அகதிகள் இந்தியாவிலேயே தொடர்ந்தும் வாழ விரும்பினால் பொருத்தமான ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு திரும்பும் இலங்கை அகதிகளுக்கு சில வசதிகளை செய்து கொடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *